விக்கிரக ஆராதனையை விட்டு, கர்த்தரை நோக்கித் திரும்புவோம் (தொடர்ச்சி)
விக்கிரக ஆராதனையை விட்டு, கர்த்தரை நோக்கித் திரும்புவோம் (தொடர்ச்சி)

"மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கொப்பான ஒரு சொரூபத்தையாகிலும், நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராகிய நான், எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து, பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம், நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன்." — உபாகமம் 5:8–9 இதே போன்ற வசனங்களை யாத்திராகமம் 20-ஆம் அதிகாரம் 3 முதல் 5 வரையுள்ள வசனங்களிலும் பார்க்கலாம். லேவியராகமம் 26-ஆம் அதிகாரம் 1-ஆம் வசனத்தில், "நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும், சொரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரம் தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும் பொருட்டு உங்கள் தேசத்திலே வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்" என்று சொல்லப்பட்டுள்ளது. மனிதன் ஒரு கல்லை எடுத்து, தன் திறமையினால் சித்திர வேலைப்பாடுகளை அந்தக் கல்லில் செய்து, அதைத் தெய்வமென்று கூறினால், அது தெய்வமாகிவிடாது. அந்த மாதிரியான தெய்வமென்று சொல்லப்படும் கற்களை, தேசத்திலேயே வைக்க வேண்டாம் என்று நம் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ஏசாயா 42-ஆம் அதிகாரம் 17-ஆம் வசனத்திலும், "சித்திர வேலைப்பாடான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சொரூபங்களை நோக்கி, 'நீங்கள் எங்கள் தேவர்கள்' என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. யாராக இருந்தாலும், விக்கிரக ஆராதனையை விட்டு, நம் தேவனாகிய கர்த்தரிடத்தில் மனம் திரும்பக் கடவர். "கேட்கிறதற்குக் காதுள்ளவர்கள் கேட்கக் கடவர்." கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
메타데이터
- post_id
- 6f2ccb4aba59
- slug
- விக்கிரக-ஆராதனையை-விட்டு-கர்த்தரை-நோக்கித்-திரும்புவோம்-தொடர்ச்சி-6f2ccb4aba59
- url
- https://medium.com/@chandravadhana/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-6f2ccb4aba59
- canonical_url

- author_url
- https://medium.com/@chandravadhana
- status
- ok
- fetched_at
- 2026-07-13 06:23:13