அவளுக்காக ஒரு குறள்
நீங்க காதலிச்சு இருக்கீங்களா? காதல் எப்படி இருக்கும்? காதல் தயங்குமா? காதல் சிரிக்குமா? காதல் இனிக்குமா? காதல் கலங்குமா? காதல் விலகுமா? ஒரு…
அவளுக்காக ஒரு குறள்
நீங்க காதலிச்சு இருக்கீங்களா? காதல் எப்படி இருக்கும்? காதல் தயங்குமா? காதல் சிரிக்குமா? காதல் இனிக்குமா? காதல் கலங்குமா? காதல் விலகுமா? ஒரு வேளை காதல் வதைக்குமா? இல்ல காதல் எப்பவும் போல குழப்புமா? தெரியல ல!
அப்போ நாம ஒண்ணா இத தெரிஞ்சு போம்! நாம தமிழ் படைப்புகள்ல இருந்து! தமிழ் சங்க நூல்கள்ல இருந்து! அதை படிக்குறது எவ்வளோ நல்லா இருக்கும் தெரியுமா!
வாங்க! நான் உங்களுக்கு படிச்சு காட்டுறேன்! இன்னைக்கு ஒரு திருக்குறள் படிச்சேன். ரொம்ப relatable-ஆ இருந்தது எனக்கு.
அவ ரொம்ப அழகான பொண்ணு. “எவ்வளோ அழகு?”ன்னு கேட்டா… அதை எப்படி சொல்லறதுனு கூட தெரியல. இந்த writing-ல ரொம்ப அர்ப்புதமான விஷயம் என்னன்னு தெரியுமா? பூமில இருக்குற எல்லா பொருளையும், எல்லா உயிரையும் வர்ணிச்சு எழுத முடியும். பொதுவா கவிதை எழுதுறவங்க… Easy-aa ஒரு பொண்ணை வைத்து ஒரு நிமிஷத்துல எழுதிடுவாங்க.
அப்படி இருக்கும்போது… ஒரு கவிஞனுக்கு அவ ஒருத்திய பற்றி எழுத முடியலனா? முடியலனு இல்ல… ஒரு வார்த்த கூட அவளை describe பண்ண கிடைக்கலனா? அப்படிதான் எனக்கும்.
ஆனா… அதுக்கே நமக்கு ஒருத்தர் already help பண்ணிட்டாரு. ரெண்டே வரி. ஆனா அவ்ளோ depth. காதல்ல என் நிலைமை சொல்லுற அந்த 250 குறள்ல… இதுவும் ஒண்ணு.
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்த நின் மார்பு. –1311
இது என்னனா… தலைவி, தலைவன் கிட்ட சின்ன கோவத்துல பேசுற scene. “உன் அழகு எல்லாரோட கண்ணுக்கும் பொதுவா போயிடுச்சு. எல்லாரும் உன்னை ரசிக்கிறாங்க. நான் அந்த கூட்டத்துல இருக்க மாட்டேன்… நீ என்னோடவன்தான் இருக்கணும்”ன்னு playful-ஆ கிண்டல் பண்ணுறாள்.
அது தான் காதல் இல்லையா? அழகைப் பார்த்து ரசிப்பது வேற… அந்த அழகை “என்கிட்ட மட்டும்”னு possessive-ஆ நினைப்பது வேற.
Sometimes… love-na admiration இல்ல. Love-na “public-aa இருக்குற அழகை கூட private-aa feel பண்ணணும்”ன்னு நினைப்பது.
அதனாலே திருவள்ளுவர் எழுதிய அந்த குறளை… எனக்கேற்ற மாதிரி நான் மாற்றிக்கிட்டேன். ஒரு காதலனோட point of view-ல மாற்றி எழுதிக்கிட்டேன்:
“ஆணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்த நின் தோள்”
இங்க feelings same தான்… perspective மட்டும் வேறு. அவள் அழகை எல்லாரும் பார்ப்பாங்க… ஆனா அவன் மனசுக்கு அது acceptable இல்ல. அவன் நினைப்பது ஒன்னே “உன் அழகு உலகத்துக்காக இல்ல… அது எனக்காக.”
அதனால தான் இந்த குறள்… ரொம்ப relatable.

메타데이터
- post_id
- 00bc18d40c1e
- slug
- அவளுக்காக-ஒரு-குறள்-00bc18d40c1e
- url
- https://medium.com/@gowthammuraliscribbles/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-00bc18d40c1e
- canonical_url
- https://medium.com/@gowthammuraliscribbles/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-00bc18d40c1e
- author_url
- https://medium.com/@gowthammuraliscribbles
- status
- ok
- fetched_at
- 2026-08-02 21:10:14