திருவாசகமும் மாணிக்கவாசகரும்
இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வேதங்கள், திருவாசகம் ஆகியவற்றில் எது சிறப்பு வாய்ந்தது?
திருவாசகமும் மாணிக்கவாசகரும்

மாணிக்கவாசகர்
இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வேதங்கள், திருவாசகம் ஆகியவற்றில் எது சிறப்பு வாய்ந்தது?
வேதத்தைப் படிக்கும்போது உணர்ச்சி ஏதும் ஏற்படமாட்டாது;
ஆனால் திருவாசகம் படிக்கும்போது கருங்கல் மனமும் கரைந்து உகும்; தொடுமணற் கேணியை விட கண்கள் அதிகமாக நீர் சுரந்து பாய்ச்சும்; மெய்யின் மயிர் சிலிர்க்கும்; உடல்விதிவிதிர்ப்பெய்தி படிப்பவர் அன்பராவார் என்று துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் கூறுகிறார்.
இதோ வள்ளலார் அவர்களின் பார்வையில் தேன்மதுர தெய்வ திருவாசகம்
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
- வடலூர் ராமலிங்க அடிகளார்
“திருவாசகம் வேறு, சிவன் வேறு”, என்று எண்ணப்படாமல், சைவர்கள் பலரால் திருவாசக ஏடு, பூசையில் வைத்து வணங்கப்படும் பெருமையினையுடையது. திருவாசகப்பாடல்கள் உருகு உருகிப் பாடப்பெற்றமையால், படிப்பவரையும் கேட்பவரையும் மனம் உருகச்செய்யும்.
“திருவாசகத்துக்கு உருகாதார், ஒரு வாசகத்துக்கும் உருகார்”
என்பது பழைய வாக்கு. குருவடிவாகக் காட்சியளித்து, தீட்சை தந்து, மறைந்த சிவனை மீண்டும் பெற நினைந்து, நினைந்து, நனைந்து பாடியவை. அவருடைய அனுபவம்,
“அழுதால் உன்னைப் பெறலாமே!”
மாணிக்கவாசகரால் எழுதப்பட்ட பெரும் நூல்கள் இரண்டு:
1.திருவாசகம்;
- திருக்கோவையார். ..”
நாமும் திருவாசகத்தை உள்வாங்கி அரனருள் பெறுவோம்.
திருச்சிற்றம்பலம்
메타데이터
- post_id
- 4b74d9126386
- slug
- திருவாசகமும்-மாணிக்கவாசகரும்-4b74d9126386
- url
- https://medium.com/@saivasivam/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4b74d9126386
- canonical_url

- author_url
- https://medium.com/@saivasivam
- status
- ok
- fetched_at
- 2026-07-30 18:08:18