Fact Check புரளி பேசுது!
கடந்த முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இருந்த திராவிட மாடல் அரசானது, சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புத் துறை…
Fact Check புரளி பேசுது!
கடந்த முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் இருந்த திராவிட மாடல் அரசானது, சிறப்பு திட்ட அமலாக்க துறையின் கீழ் உண்மை சரிபார்ப்புத் துறை (FCU) ஒன்று அமைத்து அரசாணை விடுவித்தது, அதன் இயக்குநராக ஐயன் கார்த்திகேயன் அவர்கள் செயல்பட்டு வந்தார். இந்த துறை வழி சமூக ஊடகங்களில் மக்களை அச்சுறுத்தும் அல்லது திசை திருப்பும் வகையில் பரவும் பொய் தகவல்களை (வதந்தி) கண்டறிந்து உண்மையை ஆதாரத்தோடு விளக்குவதும், அதை நடவடிக்கை எடுக்கக் கூடியவை, அல்லாதவை என தரம் பிரித்து நடவடிக்கை எடுக்கக் கூடிய வதந்தி எனில் அதை சட்டப்படி நகர்த்துவதுமாக செயல்பட்டது.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் வதந்திக்கு பஞ்சமே இல்லை. த வெ க ஆட்சிக்கு வந்ததிலிருந்து (அதற்கு முன்பும் கூட) சமூக ஊடகங்களில் காண்பதெல்லாம் பொய் என்றாகிவிட்டது, பொய் புரட்டுகள் வழி Cyber Terrorism நடத்தி வருகிறார்கள் த வெ க -வினர் . இந்த பொய் புரட்டுகள் தொல்லை தாங்க முடியாமல் THE HINDU தனது ஆதங்கத்தை வலையொலியில் பத்து நிமிட உண்மை விளக்க காணொலியாக வெளியிட்டது, எதிர் கட்சியாக உள்ள தி மு க -வும் தனது IT Wing வழி Counter கொடுத்து கொண்டே வந்தது.

இந்நிலையில் இத்தனை நாள் ஆட்சிக்கு சாதகமாக பரவிய புரளிகள் எதையும் கண்டு கொள்ளாத TN FCU முதல் முறையாக ஆட்சிக்கு அவப் பெயர் ஏற்படுத்தும் வண்ணம் வந்த செய்தியை பொய் என முட்டுக் குடுக்க முதல் பதிவை இறக்கியுள்ளது!.

செய்தி : சென்னை அண்ணா சாலையில் உள்ள பாவாணர் நூலக அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் தேவநேயப் முன்னாள் புகைப்படம் திடீரென அகற்றப்பட்டது, அமைச்சர் நிகழ்வு முடிந்ததும் மீண்டும் வைக்கப்பட்டது .
இதற்கு TN FCU இது தவறான தகவலாகும். இது குறித்து சென்னை மாவட்ட நூலக அலுவலர் அளித்துள்ள விளக்கத்தில், “08.04.2026 அன்று தேவநேயப் பாவாணர் அரங்கத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒப்பனைக் கூரை, எச்சரிக்கை மணி மற்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவடைந்த பின்னர் கழற்றி வைக்கப்பட்ட புகைப்படங்கள் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டன.” என்று குறிப்பிட்டுள்ளார். தவறான தகவலைப் பரப்பாதீர்!
என பதிவு இட்டுள்ளது. இப்பதிவில் அவர்கள் புகைப்படங்கள் என குறிப்பிட்டு இருக்கையில் யார் யார் புகைப்படங்கள் என குறிப்பிடவில்லை. பாலிமர் செய்தி வெளியிட்ட காணொளியில் மற்ற தலைவர்கள் புகைப்படங்கள் எல்லாம் இருக்கிறது, முத்தமிழறிஞர் கலைஞரின் புகைப்படம் மட்டும் தான் இல்லை. அரங்கத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சாதனப் பெட்டி தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஒப்பனைக் கூரை, எச்சரிக்கை மணி மற்றும் புகைப்படங்கள் அகற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் கூறியது போல மின்கசிவு நிகழந்திருக்குமாயின் ஏன் கலைஞர் அவர்களின் புகைப்படத்தை மட்டும் அகற்ற வேண்டும்?
உண்மை சரிபார்ப்பகம் தூக்கத்தில் இருந்து எழுந்தது வரவேற்கத் தக்கது. எனினும் அரசுக்கு சாதகமான புரளிகளையும் சரிபார்க்குமா? இல்லை புலிகேசி எவ்வழியோ புலவர்களும் அவ்வழியே என கொஞ்சம் Time குடுக்க bro! என நேரம் தாழ்த்துமா?

메타데이터
- post_id
- 766ade0ebf67
- slug
- fact-check-புரளி-பேசுது-766ade0ebf67
- url
- https://medium.com/@karkykathir/fact-check-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-766ade0ebf67
- canonical_url
- https://medium.com/@karkykathir/fact-check-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-766ade0ebf67
- author_url
- https://medium.com/@karkykathir
- status
- ok
- fetched_at
- 2026-06-20 20:29:01