#34| 04.02.2026 : What do we consistently do with our possibilities?
எவ்வளவு பிழைபட்டதாயினும் தொடர்ச்சியான செயலுக்குத்தான் மதிப்பே தவிர மிகவும் அலங்காரமாக பேசப்பட்ட பேச்சுக்கு அல்ல
#34| 04.02.2026 : What do we consistently do with our possibilities?

- ஜெயமோகன் அபிலாஷுக்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டது -
அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது. எந்த ஒரு தளத்திலும் செய்துபார்ப்பதே முக்கியமானது. செயல் மூலம் கிடைக்கும் படிப்பினைகளைக்கொண்டுதான் ஒவ்வொரு ஆளுமையும் தன்னைக் கண்டடைகிறது. சொல்லப்போனால் ஒரு எண்ணம் செயலாக்கப்படுகையில் கண்டுகொள்ளும் தடைகள்மூலமே அவ்வெண்ணத்தின் உண்மையான சாத்தியக்கூறு கண்டடையப்படுகிறது. கட்டுரையின் தலைப்பு — செயலின்மையின் இனிய மது: https://www.jeyamohan.in/35710/
-
நமக்கு பல கலைகளில்/விஷயங்களில் நாட்டமோ இன்பமோ இருக்கலாம். நமக்கு எது நன்றாக வருகிறதோ அதை நாம் அன்றாடம் சாதகம் செய்கிறோமா? உபாசனை செய்கிறோமா?
“கநாசு வுக்கு சில கோட்பாடுகள்இருந்தன. கலையென்றால் ஒரு தேவதையை தான் ஆராதனை பண்ணனும். நான் எழுத்தையும் ஆராதனை பண்ணுவேன். இன்னொரு கலையையும் ஆராதனை பண்ணுவேன் என்று சொல்லக்கூடாது என்று நினைப்பவர் க நா சு”. Jealous Mistress. ஒரு கலை இன்னொரு கலைக்கு சக்களத்தி.
-
டெண்டுல்கர், இளையராஜா, விஸ்வநாதன் ஆனந்த்…
-
How many of our has the perseverance to practise for 10000 hours?
-
Kevin Kelly’s states consistently being there is the most significant step. வெண்முரசின் பீமன் சொல்வதும் அதுதான் (பிரயாகை — பாஞ்சாலத்துடனான முதல் போரில் நகுலனுக்குச் சொல்வது)
-
தல்ஸ்தோயின் (Leo Tolstoy) மனைவி சோஃபியா தான் தல்ஸ்தோயை விட சிறந்த எழுத்தாளர் என்று மிகவும் சீரியசாக நம்பினார்.
-
நாம் செய்த செய்லகளின் வழியே எது வெளிப்பட்டுதோ அதற்குத்தான் மதிப்பே தவிர நாம் நம்மைப் பற்றிக் கொண்டுள்ள அபிப்ராயங்களுக்கு அல்ல.
-
எவ்வளவு பிழைபட்டதாயினும் தொடர்ச்சியான செயலுக்குத்தான் மதிப்பே தவிர மிகவும் அலங்காரமாக பேசப்பட்ட பேச்சுக்கு அல்ல.
-
If it’s worth doing, it’s worth doing right. If it’s worth doing right, it is worth doing right at first and every other time
메타데이터
- post_id
- bb1e336a9c83
- slug
- 34-04-02-2026-what-do-we-consistently-do-with-our-possibilities-bb1e336a9c83
- url
- https://medium.com/@venkatramanan/34-04-02-2026-what-do-we-consistently-do-with-our-possibilities-bb1e336a9c83
- canonical_url
- https://medium.com/@venkatramanan/34-04-02-2026-what-do-we-consistently-do-with-our-possibilities-bb1e336a9c83
- author_url
- https://medium.com/@venkatramanan
- status
- ok
- fetched_at
- 2026-06-14 17:09:17