← Back to list

வைகோவுடன் ஓர் உரையாடல்

நி: சீட்டு பேரம் எல்லாம் முடிஞ்சு தெம்பா இருக்கீங்க போலயே..

Amaruvi Devanathan · 2026-04-11 13:44 · 0 claps · 0.9 min read
#tamil
Open on Medium ↗

வைகோவுடன் ஓர் உரையாடல்

நி: சீட்டு பேரம் எல்லாம் முடிஞ்சு தெம்பா இருக்கீங்க போலயே..

வை: ஓட்டுக்காக நடக்கற சீட்டு பேரம் எனக்கு முக்கியமில்லை. என் வீட்டுக்காக நடந்த கூட்டணி பேச்சு. அரைஸ்டாட்டில் என்ன சொல்றாருன்னா…

நி: அவரை விடுங்க. ஸ்டாலினுக்கு இலங்கை பிரச்சனை பத்தி தெரியாதுன்னு சொன்னீங்க. இப்ப அவரோட சேர்ந்து…

வை: அவருக்கு சிலோன் பிரச்சனை தெரியும்னு சொன்னேனே. சிலோனும் இலங்கையும் ஒண்ணுதான்னு தலைவர் கலைஞர் சொல்லியிருக்காரே.

நி: விடுதலைப் புலிகள், தமிழ் ஈழம் பிரச்சனையில் காங்கிரஸ்…

வை: விடுங்க. முடிஞ்சு போன விஷயம். அவ்ளோதான்.

நி: விடுதலைப் புலிகள், இலங்கை… முடிஞ்சு போனதா? என்னங்க இது?

வை: மீட்டர் ஓடலீங்களே. முன்னெல்லாம் 2009 வரை மீட்டர் ஓடிச்சு. இப்ப இல்லியே. மீட்டர் ஓடாம மேட்டர் எப்படி?

நி: அதால…

வை: அதால, மாண்புமிகு அண்ணன் தளபதி தலைமைய ஏற்றுக்கொண்டு, அடாது மழை பெய்தாலும் விடாது மீட்டர் ஓட்டும் கலைஞரின் விதிகளின் படி, ஃபாசிச பாஜகவை எதிர்த்து, சாக்ரடீஸ் காட்டிய வழியில்…

நி: சரி விடுங்க. சிரமப் படாதீங்க. தமிழ் நாட்டுல மின்சார நிலமை…

வை: தமிழக மக்களுக்கு மின்சாரம் வழங்காத மத்திய ஃபாசிச பாஜக…

நி: நீங்க தானே கூடங்குளத்தை எதிர்த்தீங்க?

வை: மாவீரன் நெப்போலியன் என்ன சொன்னார்? அணு உலை வேண்டாம் ஆனால் மின்சாரம் வேண்டும். அதுதான் எங்க கொள்கை.

நி: நியூட்ரினோ எதிர்ப்பு பத்தி…

வை: எனக்கு நியூட்ரினோ பிடிக்காது. காஃபி பைட் தான் பிடிக்கும். அதால எதிர்த்தேன். அறிஞர் தொ.பா. என்ன சொல்றார்ன்னா..

நி: உட்கட்சி ஜனநாயகம் பத்தி… உங்க கட்சியில ஜனநாயகம்…

வை: ‘ஜனநாயகன்’ படம் வந்தவுடன் பார்த்துட்டு சொல்றேன்.

-ஆமருவி


메타데이터
post_id
cfaac017613a
slug
வைகோவுடன்-ஓர்-உரையாடல்-cfaac017613a
url
https://medium.com/@amaruvi/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-cfaac017613a
canonical_url
https://medium.com/@amaruvi/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-cfaac017613a
author_url
https://medium.com/@amaruvi
status
ok
fetched_at
2026-06-25 12:15:08