← Back to list

மாட்டிறைச்சி கலாச்சாரமா அல்லது உணவா?… சென்னை உணவு திருவிழா ஒரு பார்வை…

- நவ்யா ஃபெல்சின்.ஆ

Navia Felcin · 2025-04-11 02:33 · 0 claps · 1.8 min read
#beef-controversy #politics #food-festival #neelam #pa-ranjith
Open on Medium ↗
Wiki topics: 🍳 · Food & Cooking 🏛️ · Politics

மாட்டிறைச்சி கலாச்சாரமா அல்லது உணவா?… சென்னை உணவு திருவிழா ஒரு பார்வை…

  • நவ்யா ஃபெல்சின்.ஆ

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்ற தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சென்னை உணவு திருவிழாவை நடத்தினர். இந்த உணவு திருவிழா சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2024 டிசம்பர் 20 — டிசம்பர் 24 வரை நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவை துணை முதல் அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். உணவு திருவிழா மதியம் 12:30 மணியளவில் தொடங்கி இரவு 8:30 மணிவரை நடைபெற்றது. வாடிக்கையாளர்களுக்கு இலவச அனுமதியும் வழங்கப்பட்டது அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்கள் தாங்கள் விருப்பப்படுகின்ற உணவினை விலை கொடுத்து வாங்கி உண்டார்கள். கிட்டத்தட்ட 65 சுய உதவி குழுக்கள் சார்பாக 150 க்கும் மேற்பட்ட மகளிர்கள் மூலம் 35 உணவு அரங்குகள், 7 தயார்நிலை உணவு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த உணவு திருவிழாவில் மதுரை கறி தோசை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், சேலம் தட்டுவட செட் போன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு மாவட்டங்களின் 286 ஸ்பெஷல் உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. சென்னையில் வசித்து வரக்கூடிய பலதரப்பட்ட மக்கள் உணவு திருவிழாவில் மகிழ்ச்சியாக வாங்கி உண்டனர். மேலும், இந்த உணவு திருவிழாவானது கோலாகலமாக நடைபெற்று வந்தது. இது போன்ற ஒரு சூழலில் தான் பா. ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி அதற்கு கண்டனம் தெரிவித்தது. இது தொடர்பாக நீலம் பண்பாட்டு மையம் தங்களுடைய x தளத்தில், “ இங்கு இருக்கக்கூடிய அனைத்து மக்களுமே தற்போது மாட்டிறைச்சியை உட்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். அப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில், மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? திட்டமிட்டு மாட்டிறட்சியை புறக்கணித்திருக்கிறார்கள். உணவு எங்கள் உரிமை. மேலும் இதற்கு நாங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் “என்று பதிவு செய்திருந்தார்கள். இது மிகப் பெரிய ஒரு சர்ச்சையை மக்களிடத்திலும், அரசியல் களத்திலும் எழுப்பியது. மக்கள் மத்தியில் பலர் நீளம் பண்பாட்டு மையத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்தார்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில்,சென்னை உணவு திருவிழா ஏற்பாட்டாளர்கள் தரப்பினர் விளக்கம் தந்தார்கள். “ அதாவது மற்ற இறைச்சி போல மாட்டிறச்சியும் உணவுத் திருவிழாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது கரூர் மாவட்ட உணவுகளை விற்பனை செய்வதற்காக ஒதுக்கப்பட்ட ஸ்டால் எண் 17 யில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. எந்த ஒரு உணவும் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படவில்லை “ என்றனர்.

இது தொடர்பாக ஸ்டால் எண் 17 ஐ நடத்திவருபவர், “ இந்த ஸ்டாலில் மாட்டிறைச்சி முதல் நாளில் இருந்து போடவில்லை. ஏனென்றால்,மாட்டிறைச்சியை விற்றால் சராசரியான இறைச்சி போல் விற்கப்படுமா? என்ற ஒரு சந்தேகமானது எங்கள் மனதில் இருந்தது. அதுமட்டுமல்லாமல் இங்கு இருக்க கூடிய அரசியல் சூழ்நிலையும் சரி, அதனை ஒரு ஒதுக்கப்பட்ட உணவாக தான் பார்க்கிறது. மேலும்,நாங்கள் இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எனவே,நாங்கள் இதனை முன்னெடுத்தால் ஏதாவது ஒரு பிரச்சனை எங்களுக்கு வருமோ என்ற ஒரு பயமும் இருந்தது. ஆனால் இரண்டாவது நாளன்று நாங்கள் மாட்டிறைச்சியை போட தொடங்கினோம். நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை சென்னையில் இத்தனை மாட்டிறைச்சி பிரியர்களாக இருப்பார்கள் என்று. ஏனென்றால், காலையில் இருந்து மாட்டிறச்சி மட்டும்தான் விற்பனையாகிறது.அதனை,உண்பதற்கு என்றே ஒரு தனி கூட்டம் வருகிறது. ஆட்டிறைச்சி, கோழிக்கறி போன்றவை எல்லாம் விற்பனையாகாமல் அப்படியே இருக்கிறது. எனவே என்னை பொறுத்தவரை மாட்டிறச்சி என்பது ஒரு உணவு தானே தவிர கலாச்சாரம் கிடையாது. “ என்று கூறினார்.

தமிழ்நாடு, சென்னை போன்ற இடத்தில் குறிப்பாக,பல்வேறு மக்கள் வாழக்கூடிய ஒரு இடத்தில், மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டது ஏற்புடையதாக அல்ல. ஏனென்றால்,தற்போது இருக்கக்கூடிய சூழலில் மாட்டிறைச்சியை அனைவரும் உட்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.இந்த உணவை இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் உண்ண வேண்டும் என்று கூறுவது முற்றிலும் தவறு. “உணவு உணவு தானே தவிர கலாச்சாரம் இல்லை.”

இந்த சமுதாயத்தில் என்றைக்கு சாதியப் பிரச்சனைகள், மதவாத பிரச்சனைகள் அழியுமோ, என்றைக்கு மக்கள் மனதில் இடதுசாரி சிந்தனைகள்,முற்போக்கு கருத்துக்கள் தோன்றுமோ அன்றுதான் இந்த அவல நிலை மாறும்.


메타데이터
post_id
d816144cc2d4
slug
மாட்டிறைச்சி-கலாச்சாரமா-அல்லது-உணவா-சென்னை-உணவு-திருவிழா-ஒரு-பார்வை-d816144cc2d4
url
https://medium.com/@23udj007/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-d816144cc2d4
canonical_url
https://medium.com/@23udj007/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-d816144cc2d4
author_url
https://medium.com/@23udj007
status
ok
fetched_at
2026-06-26 03:39:16