உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை செய்வது எப்படி?
உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை
தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு — 3 பெரிய வெங்காயம் — 1 கப் பிரெட் — 5–6 கொத்தமல்லி இலை — 1/2 கப் கரம் மசாலா — 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் — 1/2தேக்கரண்டி உப்பு — தேவைக்கேற்ப மிளகு — 1/2 தேக்கரண்டி எண்ணெய் — 1/2 லிட்டர் சோள மாவு — 1–2மேஜைக்கரண்டி

செய்முறை: 🌹உருளைக்கிழங்கை அலசி இரண்டாக வெட்டி தண்ணீரில் போட்டு வேக விட வேண்டும்.
🌹 பிரெட்டை தோசை கல்லில் போட்டு நிறம் மாறாமல் டோஸ்ட் செய்யவும்.
🌹அதனை மிக்ஸியில் போட்டு பவுடர் செய்யவும்.
🌹 பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
🌹 வெந்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்துக் கொள்ளவும்.
🌹அதனுடன் பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகு, உப்பு, பிரெட் தூள் (1/2 கப்) சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. மீதம் உள்ள பிரெட் தூளை தனியாக வைக்கவும்.. 🌹பிசைந்து வைத்துள்ள மாவை உருண்டைகளாக உருட்டவும். சோள மாவை தண்ணீர் விட்டு கரைக்கவும். 🌹வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டையை சோள மாவு தண்ணீருக்குள் போட்டு எடுத்து பின்பு பிரெட் தூளில் பிரட்டி எண்ணெய்க்குள் போட்டு பொன்னிறமாக எடுக்கவும். சூடான சுவையான உருளைக்கிழங்கு பிரெட் உருண்டை தயார்
Originally published at https://multispecial05.blogspot.com.
메타데이터
- post_id
- de6a8997cafa
- slug
- உருளைக்கிழங்கு-பிரெட்-உருண்டை-செய்வது-எப்படி-de6a8997cafa
- url
- https://medium.com/@kannadipookal21/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-de6a8997cafa
- canonical_url

- author_url
- https://medium.com/@kannadipookal21
- status
- ok
- fetched_at
- 2026-07-22 10:16:32