← Back to list

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்

சமீபத்தில் தஞ்சையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய பொழுது கம்பராமாயணம் தந்த சேக்கிழார் என்று…

elavasam · 2017-12-01 13:04 · 100 claps · 1.2 min read
#tamil #தமிழ்
Open on Medium ↗

கம்பராமாயணம் தந்த சேக்கிழார்

சமீபத்தில் தஞ்சையில் நடந்த எம்ஜியார் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசிய பொழுது கம்பராமாயணம் தந்த சேக்கிழார் என்று சொன்னதை பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதன் பின் இருக்கும் உண்மை அறியாமல் பேசுவது இவர்களது அறியாமையையே காட்டுகிறது. இது குறித்து நண்பர் ஒருவரின் பதிவில் பின்னூட்டமாக இட்டதன் விரிவான வடிவம்.

கேள்வி: எடப்பாடி பழனிச்சாமி யார்?

பதில்: தமிழக முதல்வர்.

கே: அவர் எந்தக் கட்சியை சார்ந்தவர்?

ப: அதிமுக.

கே: அவர் யாரை அடியொற்றி ஆட்சி புரிந்து வருகிறார்?

ப: புரட்சித் தலைவி நிரந்தர முதல்வர் அம்மா அவர்களைத் தொடர்ந்து.

கே: அவர் யாருடைய நூற்றாண்டு விழாவில் பேசினார்?

ப: புரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்ஜியார் அவர்களின் நூற்றாண்டு விழாவில்.

கே: புரட்சி என்றால் என்ன?

ப: இணையத்தில் தேடினேன். புரட்சி என்பது ஒரு தலை கீழான மாறுதல்! கஷ்டப் பட்ட மக்கள், மேலும் கஷ்டப்பட்டு தம் மக்களிடம் இருந்து விடுதலை பெறுவதே புரட்சி. புரட்சி என்றால், முதலாளிக்கும், தொழிலாளிக்கும் மாத்திரம் நடப்பது அல்ல! ஓர் இனத்துக்கும், மற்றொரு இனத்துக்கும், ஒரு வகுப்புக்கும் மற்றொரு வகுப்புக்கும், ஒரு மதத்துக்கும் மற்றொரு மதத்துக்கும், அரசனுக்கும், பிரஜைக்கும், இன்னும் ஒரு கொள்கைக்கும் மற்றொரு கொள்கைக்கும், இப்படி பலவாறாக நடப்பதாகும். (இதை எல்லாம் நான் சொல்லலை)

கே: இப்போ இதுக்கென்ன?

ப: புரட்சி என்பது தமிழனின் ரத்தத்தில் ஓடுவது. அன்று முதல் இன்று வரை அப்படித்தான். அதனால்தான் வடமொழி இலக்கியமான ராமாயணத்தை அப்படியே மொழி மாற்றாமல் அதில் தன் மண்ணிற்குரிய பாரம்பரியத்தையும், விழுமியங்களையும், கோட்பாடுகளையும் கொண்டு வந்து நமக்கான ராமாயணமாக உருவாக்கினான் கம்பன். அவன் அன்று செய்ததும் புரட்சியே.

கே: சரி, இப்போ அதுக்கென்ன?

ப: எடப்பாடியார் புரட்சி வழி வந்தவர். அவர் புரட்சித் தமிழன் கம்பனைப் பற்றிப் பேசும் பொழுது என்ன சொல்வார்? புரட்சி என்றால் இன்றைக்கு இளைஞர்களின் ரீசேற்றுகளில் இருக்கும் சே குவாராதான் நமக்கு ஞாபகத்திற்கு வருவார். அந்த சே குவாராவுக்கு அப்பனும் சுப்பனுமய்யா எங்கள் கம்பன் என்பதையே தூய தமிழில் சேக்கிழார் என்று எடப்பாடியார் சொன்னார். அவர் புரட்சித் தமிழன் கம்பனைத்தான் சேக்கிழார் என்று பெருமையாக விளித்தாரே தவிர இங்கு அது பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாரைக் குறிக்கவில்லை. அவரும் புரட்சித் தமிழந்தான் என்பதாலே அவருக்கும் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என வரலாற்றறிஞர்கள் கருதுவது வேறு ஒரு விஷயம்.

கே: ஓஹோ

ப: ஆக கம்பரே சேக்கிழார். கம்பராமாயாணத்தை எழுதியது இந்த சேக்கிழார்தான். நம் முதல்வர் சொன்னதன் பொருள் இதுவே. புரட்சித் தலைவர் நாமம் வாழ்க. புரட்சித் தலைவி நாமம் வாழ்க.

http://tamil.thehindu.com/tamilnadu/article21227893.ece


메타데이터
post_id
e6be6f1334b6
slug
கம்பராமாயணம்-தந்த-சேக்கிழார்-e6be6f1334b6
url
https://medium.com/@elavasam/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-e6be6f1334b6
canonical_url
https://medium.com/@elavasam/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-e6be6f1334b6
author_url
https://medium.com/@elavasam
status
ok
fetched_at
2026-07-30 08:21:23